சாவான பாவத்தின் மேல்
வாழ்வெனக்கு வந்ததடி
நோவான நோவெடுத்து
நெஞ்செரிஞ்சு வாழுறண்டி
இது தான் இந்த கதையின் சாராம்சம். இப்படி ஒரு கதையை, நாம் சந்தித்திராத, சந்திக்க விரும்பாத உலகத்தை கதையின் கருவாக எடுத்ததற்கு கண்டிப்பாக ஜெயமோகனை பாராட்டியே தீர வேண்டும்.
நமக்கு கீழே, அதாவது நாம் வாழும் பூமிக்கு கீழே ஏழு லோகங்கள் உள்ளனவாம். அதில், ஏழாம் லோகத்தில் வேதாளங்கள் இருக்கின்றனவாம். இது கற்பனையாக இருந்தாலும், இந்த கதையில் வரும் உடற்குறையுள்ள மாந்தர்களை அந்த ஏழாம் லோக வேதாளங்களோடு ஒப்பிடுகிறார்.

12924624_261739984170000_6079882908018237994_n

அகமது – தர்பூசணி சைசில் ஓதம் தள்ளிய உடல்; முத்தம்மை – சுத்தமான சதைப்பிண்டம், அனால் 18 பிள்ளைகள் பெற்றவள்; சூப்பர் ஸ்டார் – முதுமையின் ஒற்றை கை/கண் உள்ள குழந்தை; மாங்காண்டி – இரு கை/கால்கள் இல்லாத ஒரு பிண்டம்;
இப்படி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத உடற்குறையுள்ளவர்களை பிச்சையெடுக்க விட்டு, அதை வைத்து தொழில் நடத்தும் பண்டாரம் தான் கதையின் நாயகன்.
முருகா! முருகா! என நொடிக்கொருதரம் சொல்கிறார். கந்தர் கலிவெண்பா படிக்கிறார். ஆனால் தான் செய்வது பாவம் என்ற நினைப்பே இல்லாமல் இவர்களை வைத்து தொழில் செய்கிறார். ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் ஒவ்வொரு உருப்படிகளை விற்று காசு பார்க்கிறார். மீதி உருப்படிகளை வைத்து பிச்சை எடுக்க விட்டும் சம்பாதிக்கிறார்.
இந்த skin டிரேடிங்கில் ஏகப்பட்ட network இருக்கிறது. ஆனால், எல்லாம் குறையுள்ள skin/flesh trading என்பதால் இது அனைத்தும் லோக்கலில் நடக்கிறது. International level இல்லை.
இவ்வளவு அயோக்யத்தனத்தையும் பயபக்தியுடன் செய்து கொண்டே இருக்கிறார் பண்டாரம். விளைவு…ஒரு மகள் விலைமகளாகிறாள்; இன்னொரு மகளை தகுதி இல்லாத இடத்திற்கு வழியில்லாமல் மணமுடித்து வைக்கிறார். இவருக்கோ எய்ட்ஸ் வரலாம்….?
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் எதிலும் அசிங்கம், அருவருப்பு, ஆனால் ஒரு இறுக்கமான கதையை எவ்வளவு நகைச்சுவையோடு சொல்ல முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக சொல்லி முடிக்கிறார்.
கதையை படித்தவுடன் ஒரு வாரமாவது நமக்குள் ஒரு கம்பளி பூச்சி ஊரைத்தான் செய்கிறது!
முக்கியமாக இயக்குனர் பாலாவை பாராட்டியே தீர வேண்டும். Inspiration என்பதற்கு சரியான உதாரணம் ‘நான் கடவுள்’ திரைப்படம். இந்த ‘உருப்படிகள்’ என்ற கதை மாந்தர்கள் தவிர வேரெதுவும் இந்தக் கதையிலிருந்து எடுக்கவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s