10429348_205381143139218_6889516695967451129_n

தகழியின் ஆழமான அழுத்தமான ஒரு tragic காதல் கதை. மலையாளத்தில் எழுதப்பட்டு சாஹித்திய அகாதெமி விருது பெற்ற நாவல்.சு. ரா. அவர்களின் அருமையான மொழி பெயர்ப்பு. மீனவர்களின் வாழ்கையை மிக அருகில் இருந்து பார்க்கும் ஒரு அனுபவத்தை தருகிறது இந்த நாவல்.’செம்மீன்’ என்று திரைப்படமாகவும் வந்து தேசிய விருது பெற்றது.
இந்த கதையை படித்து முடித்தவுடன் ஒரு இறுக்கமான உணர்வு எழுந்தது. ஒரு விதமான சோகமும் திகைப்பும் என்னுள் நிறைந்து இரண்டு நாட்களாக அலைந்தேன்.

அரயர்களின் வாழ்க்கையை படமாக எழுத்து வடிவில் கதை முழுக்க வந்திருக்கிறது. அரயர்களாக இருந்தாலும் அவர்களின் நெறிமுறையான வாழ்க்கைமுறை, கடலை தாயாக எண்ணி வழிபடுவது, கடல்தாய்க்கு பயந்து வாழ்வில் நெறிமுறையை கடைபிடிப்பது, கடல் தொழிலை தங்கள் வாழ்வின் அர்த்தமாக எண்ணுவது என்றிருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. முக்கியமாக அரயத்தி (வீட்டுப்பெண்) சுத்தமான பழக்கவழக்கங்களுடன் இருக்க வேண்டும், இல்லையேல் அவளுடைய அரயன் மீனுக்கு கடலுக்கு போகும் போது கடல் தாய் கோபம் கொண்டு அவனை அழித்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஊறிப் போயிருக்கிறார்கள். இது தான் இந்த கதையின் மூலக் கூறு, இந்த நம்பிக்கை தான் கருத்தம்மாவின் காதலுக்கு வேட்டு வைக்கிறது.
பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கம் – வயது வந்ததும் காதலிக்கிறார்கள். கருத்தம்மாவின் காதலுக்கு அவள் தாய் சக்கி, பரீக்குட்டி நாலாந்தர மதத்துக்காரன் என்று முட்டுக்கட்டை போடுகிறாள். அதே சமயம், சக்கியும் அவள் கணவனும் பரீக்குட்டியிடம் இருந்து பணம் பெற்று தங்கள் தொழிலுக்கு பயன் படுத்தி அவனை தவறாக use பண்ணிக்கொள்கிறார்கள். பணத்துக்காக கருத்தம்மாவை பழனிக்கு திருமண முடிக்க, கருத்தம்மாவின் காதல் பாழாய் போகிறது. பரீக்குட்டி என்ன ஆனான், கருத்தம்மாவின் வாழ்வு என்னவாயிற்று என்று மிக யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார்.

இதில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ‘அப்பாவி’ பரீக்குட்டி தான். தான் செய்வது தியாகம் என்று தெரியாமலே கடைசி வரை தியாகம் செய்கிறான். அதாவது கருத்தம்மாவுக்காக அவனிடம் இருக்கும் பணத்தை அவள் தந்தையிடம் வீட்டுக் கொடுக்கிறான். அதனால் அவன் வியாபாரம் படுத்து விடுகிறது. வீடு, கடை என்று எல்லாமே போய்விடுகிறது. ஒரு இடத்தில, அவன் கடை மண்ணோடு மண்ணாக போய் விடுகிறது என்று தகழி குறிப்பிடுகிறார். மிக பயங்கரமான எதார்த்தமாக இருக்கும் அந்த இடம்.
பின்பு பழனி கருத்தம்மாவை கட்டிக் கொள்ளும் போது பரீக்குட்டி அதையும் ஏற்றுக் கொள்கிறான். சக்கி அவனிடம் கருத்தம்மாவை தங்கையாக ஏற்றுக் கொள் என்கிறாள். அத்தனையும் சகித்துக் கொள்கிறான். தன் பணத்தில், வாங்கிய தோணியில் மீன் பிடித்து அதை பரீக்குட்டிக்கு வியாபாரம் செய்யாமல் செம்மங்குச்சு உதாசீனப்படுத்தும் போது எந்தவித reactம் செய்யாமல் பரிதவித்து அடுத்த தோனிக்கு செல்லும் போது, அவன் மேல் மிகவும் பரிதாபம் வருகிறது. ஒருவன் சூது வாது அற்றவனாக இருந்தால் இந்த உலகம் அவனை எவ்வாறெல்லாம் உபயோக படுத்தி தூர வீசும் என்பதற்கு பரீக்குட்டி நல்ல உதாரணம்.

அடுத்து பழனி – கருத்தம்மாவின் புதுமண வாழ்க்கை episode, பின்பு அவள் காதல் தெரிந்து அந்த வாழ்க்கையில் விழும் விரிசல், அந்த ஊரில் கருத்தம்மாவை நடத்தை கெட்டவள் என்று ஒதுக்குவது…என்று எல்லாமே touchingஆன பகுதிகள்.
பழனி சுறாமீனை பிடிக்கும் போது ஏற்படும் கடல் கொந்தளிப்பை தகழி மிக பரபரக்கும் வார்த்தை ஜாலங்களால் விவரிக்கும் போது நமக்கு மூச்சு முட்டுகிறது.

மொத்தத்தில் மனதுக்கு நெருக்கமான ஒரு tragic காதல் கதையை படித்து அதனால் ஏற்படும் பாதிப்பில் atleast ஒரு நாலாவது நம்மை தவிக்க விடும் ஒரு காவியம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s