1934413_213775038966495_3557821621634485557_n

வாடிவாசல் – தற்போதைய (Jan’16) தமிழக சூழ்நிலையில் படிப்பதற்கு சரியான புத்தகம். 🙂

சி. சு. செல்லப்பாவின் குறு நாவல். வாடிவாசல் பற்றி அவர் கூறும் definition – ஒத்தைக்கு ஒத்தையாக கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கிற விவாகரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் அந்த வாடிவாசல்.

ஒரு வாடிவாசல் – அங்கே மனிதனுக்கும், மிருகத்துக்கும், அதாவது காளைக்கும் நடக்கும் யுத்தம். மொத்த கதையின் களமே வாடிவாசல் தான். பிச்சி, மருதன், கிழவன், ஜமிந்தார் மற்றும் முக்கியமான கதாபாத்திரம் அந்த ‘காரி’ காளை ஆகிய இந்த ஐந்து கதாபாத்திரங்களும், ஒரே கதை களத்தில் (வாடிவாசலில்) உலவ விட்டுருக்கிறார். தன் தந்தையை கொன்ற ‘காரி’ காளையை பிச்சி அடக்குகிறான் – இவ்வளவுதான் கதை.இந்த ஐந்து கதாபாத்திரங்கள் வாடிவாசலில் இருந்து கொண்டு முழு கதையையும் நகர்த்துகிறார்கள். ஒரே situation தான். ஆனால் அதை ‘fast pace mode’ல், சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் சொல்லியிருகிறார். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாடல்ல, அதில் பழி வாங்கல், சாதி ஏற்ற தாழ்வு, பகை, துரோகம், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலே இது மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள விளையாட்டு. அந்த மிருகத்துக்கு பின்னால் அதை வளர்த்த ஒரு மனிதன் இருகிறான் – அது தான் அதிகாரத்தின் அடையாளம். இப்படி எல்லா areaவையும் டச் பண்ணியிருக்கிறார்.

பிச்சி – முழுக்க முழுக்க under play பண்ணும் வித்தியாசமான heroism. அவனும் ஜமீன்தாரும் தேவர் ஜாதி தான். ஆனால், பிச்சி அந்த தேரில் கொஞ்சம் கீழ் ஜாதி. ஜமீன்தாருக்கு பணிகிறான். காளையை அடக்கும் போது, அது அவன் காலம் ஆகிறது. அங்கு ஜமீன்தார் அவனுக்கு பொருட்டல்ல, ஜமீன்தாருக்கு வாடிவாசல் தொட முடியாத எல்லை. அவரின் அதிகார தோரணை அங்கு செல்லுபடியாகாது. இப்படியாக நுணுக்கமான பல பிரச்சனைகளையும் சொல்லி விறுவிறுப்பாக கதை சொல்லிஇருக்கிறார்.

பெருமாள் முருகனின் முகவுரை top notch. ஜல்லிக்கட்டின் பாரம்பர்யத்தையும், அதை பற்றிய இலக்கிய பதிவுகள் என்று எல்லாவற்றையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s