12644742_219075105103155_5555495366658222950_n

“மனிதன் ஒரு மகத்தான சல்லி பயல்” – ஜி. நாகராஜன் எப்போதோ கூறியது. எனக்கு மிகவும் பிடித்த, நூறு சதவிகிதம் வழிமொழியும் வரிகள் 🙂

இந்த நாவல் முழுக்க முழுக்க மனிதனின் சல்லிதனத்தையும், சின்னத்தனங்களையும், போலி முகங்களையும் just like that என்று போகிற போக்கில் கோடிட்டு காட்டியுள்ளார். நகரங்களின் so-called நாகரீகம் எந்த மாதிரி மனிதர்களை கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து புளங்காகிதம் அடையலாம் 🙂

இந்த கதையின் நாயகன் ஒரு மகத்தான சல்லிப்பயல். எப்படி என்றல் மீனா என்னும் விலைமகளை விலை கொடுத்து திருமணம் செய்து கொள்கிறான். பிறகு அவளை விலைமகளாய் தொடர செய்கிறான். கதையின் கடைசியில் தன உடல் நலிவின் காரணத்தைக் கொண்டு அவளை விளக்கு விற்க ஏற்பாடு செய்கிறான்.
பளபளக்கும் நகரங்களின் வீதிகளும், பிரமாண்டமான கட்டடங்களும், போலியான மனிதர்களும் மட்டுமே பார்த்து பழகிய நமக்கு, அந்த வீதிகளுக்கு பின்னல் இருக்கும் சத்துக்களும், சாக்கடைகளை அதில் உழலும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும், தவறு/சரி என்ற கோட்பாட்டில் இருந்து மாறி வாழும் வாழ்க்கையும் நமக்கு புதிது. அந்த வாழ்வியலை மிக அழகாக, அதே சமயம் எந்த சமரசங்களும் இல்லாமல் தோலுரித்து காட்டியிருக்கிறார் நாகராஜன்.
விலைமாதர்களும், அவர்களை வைத்து தொழில் செய்யும் கீழானவர்களும், பெரிய மனித போர்வைக்குள் இருக்கும் இச்சைகளும், communism பேசும் so-called communistகளும்….என்று காலையில் ஆரம்பித்து சாயங்காலம் வரை ஒரு நாள் நடக்கும் கூத்து இந்த கதை.
இந்த ஒரு நாள், அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போலத்தான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s