கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஒரு Magnum Opus என்றால் மிகையாகாது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சில எண்ணங்கள் என்னுள் எழுந்தன…
# ஒரு தமிழனாக இந்த புத்தகத்தை 39 வருடங்களாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் நாட்களை வீணடித்தேனே என்று வெட்கம் அடைந்தேன்.
# ஒவ்வொரு தமிழனும் இந்த கதையை படிக்காமல் இறுதி யாத்திரையை மேற்கொள்ள கூடாது
# இன்னும் எத்தனை தமிழன் இந்த கதையை பற்றி தெரியாமலும், தெரிந்தும் படிக்காமல், வாழ்க்கையை வாழ்கிறார்கள்?
# தமிழின் மீது ஒரு ஆர்வமும், ஒரு கர்வமும் எழுந்தது
இவ்வாறு பல எண்ணங்கள் கலவையாக எழுந்தது. 2400+ பக்கங்களுக்கும் மேல் இருக்கும் இந்த புத்தகத்தை ஒருவித பக்தியோடும் சிரத்தையோடுமே படித்தேன். 2000 வருடங்களுக்கும் முன்னை நடந்த இக்கதையின் மாந்தர்களுடன் கலந்துரையாடினேன். கற்பனையில் மிதந்தேன், வாழ்ந்தேன் என்று சொன்னாலும் மிகையாகாது.
இந்த வரலாற்று புனைவில், என்னை கவர்ந்த சிலரை பற்றிய பதிவு இப்போது…
கல்கி
இந்த கதை ஒரு ‘வரலாற்று இலக்கியம்’. கற்பனை கதைக்கும், வரலாற்று கதைக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. கற்பனை இலக்கியத்தில் கதாசிரியன் தன விருப்பம் போல விளையாடலாம். ஆனால் வரலாற்று கதையில் ஆசிரியர் மிக ஜாக்ரதையோடு கதை புனைய வேண்டும். ஏனென்றால் வாசகர்களுக்கு வரலாற்று உண்மை தெரியும்…அதோடு கற்பனை கலந்து வாசகர்களை கட்டிப் போடவேண்டும். இதில் நிறைய ஆசிரியர்கள் தோற்றுள்ளனர்.

ponniyinselvan
கல்கி இந்த வரலாற்று புதினத்தை மிக லாவகமாக 1950 களில் இந்த பிரமாண்ட புனைவில் கலை, இலக்கியம், தமிழர் பண்பாடு, கவிதை, நட்பு, பாசம், வீரம், கோபம், மோகம், துரோகம், க்ரோதம், மதம், மகிழ்ச்சி, சூழ்ச்சி, விவேகம், அழகு, இயற்கை சீற்றம், வஞ்சம் இன்னும் பல என்று சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு அதனை அம்சங்களும் நிரம்பிய ஒரு புதினமாக உயிரூட்டியுள்ளார்,
முதல் பாகத்தில் இருந்து ஒவ்வொரு முடிச்சுகளாக போடு அதை அடுத்தடுத்த பாகங்களில் மேலும் இறுக்கி கடைசி பாகத்தில் லாவகமாக அவிழ்த்துள்ளார்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பிரம்மாண்டம். அந்த ப்ரமாண்டத்துக்குள்ளே நம்மை அழைத்து சென்று உலவ விடுகிறார். நாம் அந்த இடத்தில, அந்த கதாபாத்திரங்களோடே உரையாட மட்டும் செய்யவில்லை…மற்றபடி நாம் அதில் மறைமுகமாக வாழ்ந்து விடுகிறோம்.

மணியம் செல்வன்
இந்த வரலாற்று புனைவின் பிரமாண்ட வெற்றிக்கு ஓவியர் மணியம் ஒரு முக்கியமான கிரியாஊக்கி. ஏனென்றால், கல்கி சொன்ன அல்லது வடித்த கதாபாத்திரங்களுக்கு அழகான வடிவம் கொடுத்த ஓவியர்.
நந்தினியின் அழகையும், குந்தவையின் அழகையும் பற்றி கல்கி கூறும் கலை நயமிக்க வரிகளை நாம் படித்தாலும், மணியம் வரைந்த ஓவியம் இல்லையென்றால், அந்த வரிகளை உள்வாங்குவது கடினம் தான். அதில் மணியம் ஜெத்திருக்கிறார் என்றால் மரியாதை இல்லை…கல்கியின் கதைக்கு உயிரூட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நந்தினியின் ஆபத்தான அழகையும்
குந்தவையின் தெய்வீக அழகையும்
வந்தியத்தேவனின் அலட்சிய அழகையும்
அருள்மொழிவர்மனின் தேஜஸையும்
பழுவேட்டரையரின் முரட்டு ஆண்மைமிக்க உருவத்தையும்
பூங்குழலியின் ஏக்கம் நிறைந்த முகத்தையும்
வானதியின் குழந்தைத் தனமான வதனத்தையும்
மதுராந்தகரின் பெண்மைத்தனமிக்க க்ரோதமான முகத்தையும்
ஆழ்வார்கடியானின் குறும்பான விவேகமிக்க உருவத்தையும்
கடம்பூர் மாளிகையும், சூழல் காற்றையும், புத்தமடத்தையும்,
சுரங்க அறையையும், சுந்தர சோழரின் மாளிகையும்
நம் கண்முன்னே கொண்டு வந்து அழகாக வரைந்து காட்டியுள்ளார்.

நந்தினி
இந்த பெரும் கதையின் ஒரு பூத உடலாக கருதினால், கல்கியும் மானியமும் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற கதைமாந்தர்களை நாம் எவ்வாறு கருதுவது?

ps_004

என்னை பொறுத்த வரையில் நந்தினி இந்த கதையின் (உடலின்) முதுகுத்தண்டு. அவளாலேயே இந்த கதை (உடல்) நகர்கிறது. அவளே, இந்த கதையின் மூலம். அவளின் கோபமே, வைராக்யமே, சூழ்ச்சியே இந்த கதையின் விறுவிறுப்பிற்கு காரணம். ஆதி முதல் அந்தம் வரை மற்ற கதாபாத்திரங்கள் அவளின் செய்கைக்கு Reactive modeல் இருக்கிறார்கள் – வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் உட்பட…
அவளின் அழகை மிக ஆழமாக அழகாக வர்ணித்து கடைசியில் பாம்பிற்கு சமமாக பாவிக்கிறார் காளி. என்னதான் அவள் சூழ்ச்சி செய்தாலும் அதில் ஒரு மேலாண்மை திறனை கொடுத்திருப்பார் கல்கி – 3 வருடங்களாக கல்யாணம் செய்தும் கன்னியாகவே இருத்தல், பெரிய பழுவேட்டரையரை லாவகமாக கையாளுதல், கந்தமாறன் மற்றும் இதர இளைஞர்களை மோக வலையில் எளிதாக விழ செய்து காரியம் சாதித்தால் etc.
இவை எல்லாம் செய்தும் அவள் கணவனுக்கு துரோகம் அதாவது கற்பின் எல்லையை தொடாமல் இருப்பது என்று அவளின் characterக்கு ஒரு top notch potrayal பண்ணியிருக்கிறார் கல்கி.
ஆதலால், என்னை பொறுத்தவரையில் நந்தினியே முதலிடம் பெறுகிறாள். என்னதான் அவள் இந்த கதைக்கு வில்லியானாலும் என்னை பொறுத்தவரை அவள் தான் இந்த பெருங்கதையின் நாயகி.

வந்தியத்தேவன்
கல்கி இந்த characterஐ ‘Mask of Zorro’ மாடலில் படைத்திருக்கிறார். இந்த இளைஞனின் துடிப்பு மிக்க வேகமும், விவேகமும், பெண்களை கவரும் அம்சமும், சாதுர்யமும், சோழ நாட்டின் மீதுள்ள பக்தியும், பண்பும், உண்மையும் இந்த characterன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாவதில்லை ஆச்சர்யமில்லை. இவனே, இக்கதையின் நாயகன்.

ponniyin_selvan_vandhiyathevan

நந்தினியால் உருவான சம்பவங்களை நகர்த்துபவன் வந்தியத்தேவனே.
ஆடிப்பெருக்கன்று நதியின் ஓரமாக வந்தியத்தேவன் குதிரையின் மீது அமர்ந்து சோழவள நாட்டை ரசித்து வருவதுதான் கதையின் ஆரம்பம். அதிலேயே வந்தியத்தேவனையும் கதையின் தளத்தையும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பிடித்து விடுகிறது.
கல்கி ஒரு socialistம் communistம் ஆவர். ராஜ பரம்பரையில் உள்ளவர்க்கே எல்லா பாத்யதை என்பதை தன் கதைகளில் மாற்றுவார். அதுபோல வந்தியத்தேவன் ஒரு அநாதை, வாழ்ந்து கெட்ட வாணர்குல வீரன் – ஆனால் அவன் ராஜ பரம்பரையில் வந்த குந்திதேவி மனைவியாவாள். அதன் மூலம் அவன் ராஜபரம்பரைக்குள் வந்து விடுகிறான்.
மற்றபடி அவனின் சாதுர்ய பேச்சும் சாமர்த்தியமான நடவடிக்கைகளும், நகைச்சுவை பேச்சும் இந்த முழு கதையையும் தங்கு தடையில்லாமல் நகர்த்தி செல்கிறது.

அருள்மொழிவர்மன்
கதையின் நாயகன் இவரே, ஆனால் இவரின் பங்கு மிக குறைவு. இரண்டாம் பாகத்தின் பாதியில் தான் வருகிறார் – மற்ற பாகங்களிலும் இவரின் presence குறைவு தான். ஆனால் கல்கி மிக சாமர்த்தியமாக, வித்தியாசமாக புதுவித (அந்த காலகட்டத்திலேயே) ஹீரோயிசத்தை introduce பண்ணியிருக்கிறார். அதாவது முதல் பாகத்திலிருந்து கடைசி வரை எல்லா charactersம் இவரை பற்றியே பேச விட்டுருக்கிறார். கதாநாயகன் இல்லை, ஆனால் எல்லோரும் அவரை பற்றியே பேசி வாசகர்களை எதிர்பார்க்க வைத்து விடுகிறார். இது மிக வித்தியாசமான முயற்சி.
அதேபோல, இவன் அறிமுக காட்சி இன்னும் என் நினைவுகளிலிருந்து அகலவில்லை – யானை பாகனாக வந்து அங்கே இருக்கும் குதிரையில் வேகமாக செல்கிறார்…பின்னாடி வந்தியத்தேவன் வேகமாக அவரை யாரென்று தெரியாமல் பின் தொடர்கிறான்…அப்போது சடாரென அருள்மொழி குதிரையை திருப்பி வந்தியத்தேவனை நிலைகுலைய செய்கிறார். அதன்பிறகு இருவரும் சண்டையிடுகிறார்கள். இதுதான் அவருடைய Grand Entry. 1950களில் எப்பேர்ப்பட்ட கற்பனை? Bravo!
முக்கியமான மற்றொரு நிகழ்வு – பொன்னியின் செல்வனின் தியாகம். தனக்கு கிடைக்க இருந்த மன்னர் பதவியை மதுராந்தகற்கு விட்டுக்கொடுப்பது. இதுவே கதையின் highlight. த்யாகசுடராக திகழ்கிறார் அருள்மொழி. இதுவும் ஒரு கம்யூனிசத்தின் வெளிப்பாடுதான். தன் வயதிற்கும் அப்போதைய சூழ்நிலையில் தகுதியில்லாத பதவி வேண்டாம் என்று சொல்லும் தைரியம் யாருக்கு வரும்? அதுவே ராஜராஜனின் பெருமை…!

ஆழ்வார்க்கடியான்
உடல் முழுக்க மூளை என்று சொல்லும்படியான characterization. வைஷ்ணவன் என்ற போர்வையில் மிகப்பெரிய உளவாளி. சோழநாட்டிற்கு உண்மையாக உழைக்கும் கெட்டிக்கார வைஷ்ணவன். வந்தியத்தேவனையே போட்டுப்பார்க்கும் அதிசய மனிதன். இலங்கையில் பொன்னியின் செல்வரை தேடிப்போகும் போது மதம் பிடித்த யானையிடமிருந்து தப்பிக்கும் பகுதி, வீரவைஷ்ணவராகிறார்.

மந்தாகினி
நந்தினியின் தாயார் – பிச்சி; ஊமைச்சி என்று பல பேர் பலவிதமாக கூறும் ஒரு charaacter. ஆனால் கல்கி அவர்கள் இந்த மந்தாகினியை ஒரு தெய்வ அம்சமாக படைத்திருக்கிறார். அருள்மொழிவர்மரை ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவதிலாகட்டும், சோழ அரசரை மெளனமாக காதலிப்பதாகட்டும், கடைசியில் அவருக்காக உயிர் கொடுப்பதிலாகட்டும், மிக அழுத்தமாக கல்கி இந்த characterஐ படைத்திருக்கிறார். இதில் முக்கிய catchy point நந்தினியும் மந்தாகினியும் dual role. மேலும் யார் நந்தினியின் தந்தை, அதாவது மந்தாகினியை திருமணம் செய்தவர் யார் என்ற twist கடைசி வரையில் வருவது super thrill

பெரிய பழுவேட்டரையர்
இந்த characterஐ ஒரு mixed emotionஆக படைத்திருக்கிறார். அதாவது வீரமும், தைரியமும், கடமை உணர்ச்சியும் உள்ள ஒரு ஆள் – 80 வயதுடைய கிழவர். இவர் இந்த வயதில் ஒரு அழகிய இளம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட பிறகு சந்தேகமும், காமமும், நிறைவேறாத ஆசையும், கோபமும், சூழ்ச்சியும் செய்து அழியும் ஒரு மனிதர். இந்த மாதிரி ஆட்களை நாம் பார்த்திருப்போம் – அதாவது அழகிய மனைவியை கட்டிய சாதாரண மனிதன் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள். நந்தினியும் இவரை வைத்து ஆட்டத்தை அழகாக ஆடியும் இருப்பாள்.

குந்தவை / வானதி / பூங்குழலி
இந்த மூன்று பெண்களும் இந்த கதைக்கு அத்யாவஸ்யமான ஒரு பங்களிப்பை அளித்திருப்பார்கள். குந்தவை ஒரு managerial lady ; வானதி ஒரு எளிய, அழகான, பயந்த சுவாபம் உள்ள காதலில் விழுந்த ஒரு பெண்; பூங்குழலி, ஒரு ‘down to earth’ type girl. இவள் படகோட்டியாக இருந்து ஒரு தலைக் காதலில் விழும் பெண். இந்த மூவருமே கதை என்கிற உணவுக்கு உப்பு, புளி, காரம் போல.

மற்றும் பலர்
கல்கியின் பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கிச் செதுக்கி வடித்திருப்பார். எந்த ஒரு கதாபாத்திரமும் அனாவசியமானதாக இருந்தது இல்லை. எல்லோரும் தோரணமாக அமைந்து இந்த மாபெரும் கதையை அழகு படுத்தியிருக்கிறார்கள்.

One thought on “‘பொன்னியின் செல்வன்’ – என் பார்வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s