81ayanjoq3l

I didn’t accept responsibility for my actions, because i’m not that much strong enough to face the consequences – இப்படி ஒரு escapism உள்ள ஒரு characterரிடம், ஏதும் அறியாத பதின் வயதில் தன்னை இழந்த கங்காவின் முரண்பாடான வாழ்வைப் பற்றிய புதினம். இந்த கதைக்களமே 1970களில் யதார்த்தத்தை மீறியதாக இருந்திருக்கும் – 40 வருடங்கள் ஆனபின்பும் இப்போதும் இது யதார்த்தத்தை மீறியதாகத்தான் உள்ளது. சமூகம் எனும் மாயச் சூழல் இதை முரணாக பார்க்கும் தன்மையைத் தான் நமக்கு இன்னும் தருகிறது என்றால் இன்றும் இந்த சமூக அமைப்பு, பழைய கட்டுக்களோடு ‘புதுமை’ என்ற முலாம் பூசி  மாறாமல் இருக்கிறது தானே? நாமும் அந்த புதுமைப் பூச்சோடு கங்காவின் எதிர் வீடுகளின் ஜன்னலில் இருந்து அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்க்கும் மனோபாவத்தோடுதான் இருக்கிறோம் இல்லையா? வருடங்களின் எண்கள் தான் மாறுகிறது, மனிதனின் எண்ணங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை JK எனும் ஜீனியஸிற்கு அன்றே தெரிந்திருக்குமோ என்னவோ? அதனால் தான், இன்றும் இந்த கதை புதுமையாகவும் ஆச்சர்யத்தை தரக்கூடியதாகவும் உள்ளது.

ஜீனியஸ் JKவின் முரண்பாடான characterization இந்த கங்காவும் பிரபுவும் – ஒரு வித இறுக்கமான மனஉணர்வோடு வாழும் கங்கா தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதிலும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் வெறுப்பேற்றுவதில் மகிழ்வுறுகிறாள். இதனால் அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் புரட்சிகரமானது போல் தோற்றமளிக்கும் முரணான முடிவுகள், நம்மை ஆச்சர்யமும் கடைசியில் அதிர்ச்சியும் அடையவைக்கிறது. வழக்கம் போல JK ஒவ்வொரு காதாபாத்திரங்களையும் கவனமாக கையாண்டு வாசிக்கும் நம்மை குழப்பாமல் அதன் போக்கில் போகவிட்டுருக்கிறார்.

JKயின் மற்ற கதைகளைப் போல்  இதிலும்  யாரும் கெட்டவரும் இல்லை நல்லவரும் இல்லை – நல்லவள் போல் தோற்றம் தரும் கங்காவின் தாயார் அவள் வாழ்க்கையை கெடுத்தவள்; பெண் பித்தர் போல் தோற்றம் தரும் வெங்கு மாமா, எல்லோரும் ஒதுக்கி தள்ளும் கங்காவிற்கு வாழ்க்கையை சரிசெய்து தந்தவர்; எப்போதும் எரிந்து விழும் கங்காவின் அண்ணன், அவள் மறுவாழ்விற்காக பிரபுவிடம் போய் நிற்கிறான்; இப்படி எல்லா கதை மாந்தர்களும், காலத்திற்கேற்ப மாறும் மனிதர்களைப் போல், இந்த கதையின் களத்திற்கேற்ப மாறும் தன்மையோடு படைத்திருக்கிறார் JK.

காலத்தைவென்ற classic நாவல் – இது ஒவ்வொரு தீவிர வாசகர் வீட்டிலும் இருக்க வேண்டிய MUST-TO-HAVE புத்தகம்.

3 thoughts on “சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

  1. அம்மாவை கங்கா கரிந்து கொட்டும் இடங்கள்
    அப்பா இறந்த பிறகு நீ என்ன சரிச்சு கொட்டிட்டியா? போன்ற இடங்கள் எல்லாம் JK வால் மாத்திரம் சாத்தியம் .
    JK ஒரு பிசாசு மணியன்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s