தண்ணீர்

அசோகமித்ரன் அவர்களை நேரில் பார்த்தது கிடையாது, அவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததுக் கூட கிடையாது; இருந்தாலும் அவரின் படைப்புக்களை மீறி என் மனதிற்கு அவர் நெருக்கமானவராகவே இருந்தார். அவரின் குழந்தையின் தேஜஸுடன் கூடிய முகமும், மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய பேச்சும், வாழ்வையும், மனிதர்களையும் நுணுக்கமுடனுடனும் நுட்பத்துடனும் பார்க்கும் கோணமும் அதே கோணத்துடனான அவரின் படைப்புகளும், அந்த நெருக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு என்னையுமறியாமல் மனதை படபடக்கச் செய்தது. இந்த இரண்டு நாளும் அவரின் நினைவாகவே … Continue reading தண்ணீர்

இன்று

'இன்று' அசோகமித்ரனின் நாவல் - நாவல் என்று அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆனால் எளிய வாசகனாகிய என்னைப் போன்றவர்களுக்கு முதல் பார்வையில் இது ஒரு கட்டுரை மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு என்பது போல்தான் தோன்றுகிறது.   ஆனால் இதை ஏன் நாவல் என்று முன்வைக்கப்பட்டது என்று வாசித்து முடித்து ஒரு பின்னோக்குப் பார்வை பார்த்தால், பின்வருபவன மனதில் எழுகிறது... 4 சிறுகதைகள் மற்றும் 2 கட்டுரைகள் / உரைகள் இந்நாவலில் இடம்பெற்றிருக்கிறது; ஆனால் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு இல்லை. … Continue reading இன்று

ஒரு புளியமரத்தின் கதை

தமிழ் இலக்கிய புனைவுகளை எப்படி prioritize பண்ணினாலும் இந்த மகத்தான நாவலுக்கு முதலிடமோ அல்லது top 5க்குள் ஓரிடமோ உண்டு. எல்லோரும் எல்லாவிதத்திலும் இந்த நாவலைப் பற்றிய பெருமைகளையும், ஆரோக்ய விமர்சனங்களையும் 1966 (இந்நூல் வெளியான ஆண்டு) முதற்கொண்டு தமிழ்ச் சூழலில் வைத்துவிட்டார்கள். நான் இனிமேல் எதைச் சொன்னாலும் சூரியன் கிழக்கினில் உதிக்கிறான் என்பது போலத்தான். ஒரு மரம்...புளிய மரம், நூற்றாண்டு காலம் அசையாமல் நின்று கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் நகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்து, வாழ்ந்து, … Continue reading ஒரு புளியமரத்தின் கதை

குருபீடம்

இந்த வார விகடனில் (9-Mar-2017) வெளிவந்துள்ள 'குருபீடம்' என்கிற சிறுகதை இப்போதைய இந்தியா, ஏன்...உலகமே எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையின் கொடூரத்தை, படிக்கும் நம்மை சாத்வீகமான முறையில் கூறிப் பதற அடிக்கிறது. ஜா. தீபா எனும் பெண் எழுத்தாளர்  எழுதியுள்ளார். இவர் சினிமாத்துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார் என்றும் இதற்கு முன்னே சினிமா சம்பந்தமான இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. தெளிந்த நீரோடையைப் போல கதையை நகற்றி, நாட்டின் தலையாய பிரச்சினையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்லி, வாசகனின் மனதில் … Continue reading குருபீடம்