தமிழ் இலக்கிய புனைவுகளை எப்படி prioritize பண்ணினாலும் இந்த மகத்தான நாவலுக்கு முதலிடமோ அல்லது top 5க்குள் ஓரிடமோ உண்டு. எல்லோரும் எல்லாவிதத்திலும் இந்த நாவலைப் பற்றிய பெருமைகளையும், ஆரோக்ய விமர்சனங்களையும் 1966 (இந்நூல் வெளியான ஆண்டு) முதற்கொண்டு தமிழ்ச் சூழலில் வைத்துவிட்டார்கள். நான் இனிமேல் எதைச் சொன்னாலும் சூரியன் கிழக்கினில் உதிக்கிறான் என்பது போலத்தான்.

oru-puliyamarathin-kathai
ஒரு மரம்…புளிய மரம், நூற்றாண்டு காலம் அசையாமல் நின்று கொண்டு தன்னைச் சுற்றி நடக்கும் நகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்து, வாழ்ந்து, இறந்தும் (வலுக்கட்டாயமாக) போகிறது. அந்த மரத்தின் ஒட்டுமொத்த வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை – ஆனால் அதனைச் சுற்றி நடந்த நிகழ்வுகள்தான் எத்தனை…எத்தனை? இந்தியா, சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகள், ஒரு அழகியப் பெண் தூக்குப் போட்டு இறந்துவிடுவது, அந்த மரத்தைச் சுற்றி இருந்த குளம் ஒரு சிற்றரசனால் ரோடாகிப் போவது என்று தாமோதர ஆசான் என்பவரால் விவரிக்கப் படுகிறது. அந்த விவரணையில், ஒரு குளத்தின் நடுவில் வளர்ந்த, இருந்த புளிய மரம் திடீரென கால மாற்றத்தில் நகரின் மையத்துக்கு வந்து விடுவது தெரிகிறது. அப்போதும் அந்த மரம் எந்தவித சலனமுமின்றி அமைதியான சாட்சியாகவே இருக்கிறது.

பின்பு நிகழ் காலத்தில் காதர், தாமு, செல்லப்பன், கடலை தாத்தா, இசக்கி இவர்களுக்கு இடையிலான தன்முனைப்பு அரசியலால் எல்லோரும் அழிந்து அந்த மரத்தையும் அழித்து ஓய்ந்துபோகிறார்கள். இசக்கி அந்த புளிய மரத்திற்கு விஷம் வைத்து நிர்மூலமாக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது. படிக்கும் நமக்குத்தான் மனிதன் எவ்வளவு சல்லித்தனமாக இருக்கிறான் என்று நெக்குருகிறது.

புளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முதியவர்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையேயான உரையாடல் தற்காலத்தில் நாம் இருக்கும் கேவலமான நிலையை எடுத்துக் காட்டும் highlight:

“தம்பி எதுக்குடேய் மரத்தே வெட்டிச் சாய்க்கிறாங்க?”

“செடி வெக்கப் போறாங்க”

“எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?”

“காத்துக்கு”

“மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துக் தரும்?”

“அளகுக்கு”

“செடி தான் அளகாட்டு இருக்குமோ?”

“உம்”

“செடி மரமாயுடாதொவ்?”

இளைஞன் கிழவர் முகத்தை பார்த்தான். பொறுமையிழந்து “மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை, வெட்டிவெட்டி விடுவாங்க” என்றான்.

“வெட்டி வெட்டி விடுவாங்கள?”

“ஆமா”

“அட பயித்தாரப் பயக்களா!”

மனிதனாகிய நாம் எதை நோக்கிப் போகிறோம்? யாரிடம் எதை நிரூபிக்க இந்த வேகமான மாற்றங்களும் செயல்பாடுகளும்? மேலே சொன்ன உரையாடலுக்குப் பிறகு அந்த முதியவர், உலகம் சீக்கிரம் அழியப் போகிறது என்று அவர் நினைக்கும் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக எல்லாமே நடக்கிறது என்று ஒருவித திருப்தியுடன் நடந்து போகிறார் என்று சு.ரா. எழுதியிருப்பார்.

கதையில் வரும் அந்த முதியவர் நினைத்தது போலவே, 100 அல்லது 150 வருடங்களில் மனிதனால் நடந்திருக்க வேண்டிய சீரழிவை நாம் இந்த 50 வருடங்களுக்குள் (இந்நாவல் வெளியான ஆண்டிலிருந்து) நடத்திவிட்டோம். இனி அழிவு எப்போது வருமென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி.

வாழ்க வளமுடன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s