‘இன்று’ அசோகமித்ரனின் நாவல் – நாவல் என்று அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆனால் எளிய வாசகனாகிய என்னைப் போன்றவர்களுக்கு முதல் பார்வையில் இது ஒரு கட்டுரை மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு என்பது போல்தான் தோன்றுகிறது.

 

30839179

ஆனால் இதை ஏன் நாவல் என்று முன்வைக்கப்பட்டது என்று வாசித்து முடித்து ஒரு பின்னோக்குப் பார்வை பார்த்தால், பின்வருபவன மனதில் எழுகிறது…

  • 4 சிறுகதைகள் மற்றும் 2 கட்டுரைகள் / உரைகள் இந்நாவலில் இடம்பெற்றிருக்கிறது; ஆனால் ஒன்றுக்கொன்று நேரடியான தொடர்பு இல்லை. ஆனால், இவை அனைத்திற்கும் ஒரே பின்புலம் நெருக்கடி நிலை காலக்கட்டம் (Emergency period) – அதாவது, நெருக்கடிநிலை காலக்கட்டம், நெருக்கடி நிலை முடிந்த பின்னர் இருந்த சூழல், அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட வெவ்வேறு கதாபாத்திரங்கள் என்று இந்நாவல் கோர்க்கப்பட்டிருக்கிறது
  • இன்னொரு ஒற்றுமை ஒவ்வொரு அத்தியாயமும் டால்ஸ்டாயின் நூல்களின் தலைப்பைக் கொண்டிருக்கிறது. டால்ஸ்டாய் பற்றிய ஒரு கட்டுரை (சொற்பொழிவு வடிவில்) முதல் சிறுகதையாக (?) இடம்பெறுகிறது. ஒருவேளை அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு கதைக்கும் அவரின் கதைகளின் பெயரை வைத்திருக்கிறாரோ என்னவோ?

இவ்விரு ஒற்றுமைகள் மிகுதியாக நாவலெங்கும் பரவியுள்ளது.

புனர்ஜென்மம் எனும் பகுதியில் சீதா என்கிற கைம்பெண், திருமணமானவனுடன் தொடர்பு ஏற்பட்டுப் பின்பு அவனும் கைவிட்ட நிலையில் ஆறு மாடி கட்டத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்வதை விவரிப்பது சாத்வீகமான எழுத்துக்களால் வாசகனை திணறடிக்கிறார். சமீபத்தில் இந்த மாதிரி எழுத்துக்களை நான் படித்ததில்லை…

…புடைவை பறந்துவிடக் கூடாதென்று புடைவையின் முன்கொசுவத்தைத் தன் இரு கால்களுக்கிடையில் நெறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் அந்தரத்தில் ஒரு மாடியளவு தூரம் விழுவதற்குள் அவளுடைய நினைவு தவறி விட்டது. பிரக்ஞயை தவறிய அவளுடைய உடல் இன்னொரு மாடி தூரம் விழுவதற்குள், அவள் விழுவதால் திடீரென்று ஏற்பட்ட காற்றழுத்த மாறுதலைத் தாங்க இயலாத அவளுடைய சுவாசம் மூச்சடைத்து நின்றுவிட்டது. இன்னொரு மாடி கடப்பதற்குள் அவளுடைய தலைப்பாகம் கீழுக்குத்  தழைந்து விட்டது. அது தரையில் மோதி சிதறிய போது  சீதா இறந்து போய் ஒரு வினாடிக்கும் சற்று குறைவாகவே இருந்தது.

ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு என்ன விதமான தாக்கம் இந்த சமுதாயத்தில் விழுகிறது? அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் மனநிலை என்ன விதமானது? சாதாரண மக்கள் அந்த கடுமையான தருணங்களை எப்படி எதிர் கொண்டார்கள்? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமான ஒவ்வொரு பகுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக அந்தக் கடைசி சிறுகதை  ‘நடனத்துக்குப் பின்’ஐ மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்.

நெருக்கடி நிலையில் மிக அழுத்தமான முறையில் போராடிய இருவர், அந்த நெருக்கடி நிலை முடியும் போது எதையோ இழந்து விட்டதைப் போலுணருகிறார்கள். “நிரந்தரமாக சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றால் நிரந்தரமாக வேட்டையாடப்படவேண்டும் போலிருக்கிறது” என்று நினைக்கிறார்கள். “இன்னும் நாலு நாட்களுக்குள் திரும்பவும் பழைய நிலைக்கு நாடு திரும்பி விடும். நமக்குரியது அதுதான் என்றால் அதற்கு மேல் ஆசைப்படுவது அர்த்தமற்றது தானே“, என்கிற போது ‘அர்த்தம்! நாம் தேடத் தேட அது நழுவிக் கொண்டே போகிறது‘ என்றவாறு சோமு  நடந்து செல்கிறான் என்று முடிக்கிறார் அ.மு. – அவர் நமக்கு  world class writerஆகவும் தெரிகிறார்.

 

One thought on “இன்று

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s