அசோகமித்ரன் அவர்களை நேரில் பார்த்தது கிடையாது, அவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததுக் கூட கிடையாது; இருந்தாலும் அவரின் படைப்புக்களை மீறி என் மனதிற்கு அவர் நெருக்கமானவராகவே இருந்தார். அவரின் குழந்தையின் தேஜஸுடன் கூடிய முகமும், மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய பேச்சும், வாழ்வையும், மனிதர்களையும் நுணுக்கமுடனுடனும் நுட்பத்துடனும் பார்க்கும் கோணமும் அதே கோணத்துடனான அவரின் படைப்புகளும், அந்த நெருக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு என்னையுமறியாமல் மனதை படபடக்கச் செய்தது. இந்த இரண்டு நாளும் அவரின் நினைவாகவே இருக்கிறது – அவருக்கு நானும் அஞ்சலி செய்கிறேன் என்று தெரிவித்தாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றுத் தெளிவாகவே தெரிகிறது. அதனால் என்றைக்கோ வாங்கி வைத்த ‘தண்ணீர்’ நாவலை படிப்பதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக எண்ணினேன்.

fercszndqr-1490287664

தண்ணீர்’ 1971ம் ஆண்டு எழுதிய நாவல். கதையின் மேலோட்டம் என்று பார்த்தால் சென்னையின் தண்ணீர் பஞ்சம் பற்றியதாக தோற்றமளித்தாலும், இந்தப் படைப்பு ‘அதற்கும் மேலே’ என்பது போல கீழ்-நடுத்தரவர்க்க மனிதர்கள், நகரத்தின் குரூர வாழ்க்கையுடனான தினசரி போராட்டமே இப்படைப்பின் மையப் புள்ளி.

அக்கா தங்கையான ஜமுனாவும், சாயாவும் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்கள். வாழ்வின் கோரமான பக்கத்தை எதிர்கொள்ள அனுபவமும் பலமும் இருக்கும் ஆட்களே திக்கித் திணறும் போது, 28 வயதான ஜமுனா அவள் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் எந்த யோசனையுமின்றி எதிர்வினை மட்டுமே ஆற்றி வாழ்வின் சூழலில் சிக்கிச் சீரழிகிறாள்.  சாயா மற்றுமொரு சூழ்நிலை கைதி – ஒரு பக்கம் அக்காவின் மீதுள்ள பாசம், மறு பக்கம் அவளின் அறியாமையை நினைத்து எரிச்சலடைவது என்று இயல்பானதொரு பாத்திரப் படைப்பு. மிகச் சொற்பமான கதாபாத்திரங்களுள்ள இந்த நாவலில் டீச்சரம்மா பாத்திரம் ஒரு eye-opener மாதிரியானது. வாழ்வின் இருண்ட பக்கங்கள் அனைத்தையும் பார்த்து அனுபவித்து ஜீரணித்துவிட்டு நடமாடும் ஒரு கதாபாத்திரம். ஜமுனாவிற்கு அனைத்து விதமான அறிவுரைகளையும் கூறிவிட்டு களைப்புடன் இருக்கிறாள் – அப்போது அ.மி. இப்படி கூறுகிறார் ‘ஒரு விதத்தில் அவள் களைப்பாகச் சோர்ந்து போய்விட்ட மாதிரியும் இல்லை, களைத்துப் போயிருந்தாலும் அடுத்துச் செய்ய வேண்டியிருப்பதற்குத் தன்னைத் தயார் பண்ணிக்க கொள்ளக்கூடிய நிலையில் தான் இருந்தாள்‘; இது ஒரு வகையில் வாழ்வினுடன் போராடும் மனிதர்களைப் பற்றிய ‘ஒரு சோற்றுப் பதம்’.

தண்ணீர் பஞ்சம் என்ற களத்தில் இவர்களுடைய வாழ்க்கையும் சொல்லிக்கொண்டே போகிறார் அ.மி. நாவலின் சிறப்பே, எதற்கும் ஒரு முடிவு என்று இல்லை. நாவலின் கடைசியில் மக்களும் தண்ணீருக்கு அலைகிறார்கள், ஜமுனாவும் சாயாவும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ள எந்தவித தயார்நிலையிலும் இல்லாமல், எதையோ எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

70களில் எழுதப்பட்ட இந்நாவல் எக்காலத்திலும் பொருந்தும் படி இருப்பதே இதன் வெற்றி. தண்ணீர் பஞ்சமும், கார்ப்பரேஷனின் மந்தமான செயல்பாடுகள், ஜமுனா-சாயா போன்ற பெண்களும், டீச்சரம்மா போன்ற போராடும் ஜீவன்களும், பாஸ்கர் போன்ற கயவாளிகளும் இன்றைக்கும் என்றைக்கும் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில், ஒரு நிஜ வாழ்க்கையை அச்சு பிசகாமல் பிரதிபலிக்கும் இந்த “தண்ணீர்” ஒரு வெற்றிகரமான இலக்கிய படைப்பு.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s