ஸ்ரீலஸ்ரீ

ஞானக்கூத்தனின் கவிதைகள் பொதுவாகவே கதைச் சொல்லும் தன்மையைக் கொண்டிருக்கும். ஒரு முழுமையான கதையமைப்புடன் வேறொரு அர்த்தத்தைக் கொண்ட குறிப்புடன் கூடிய கவியமைப்பு அவருடையது. 'அன்று வேறு கிழமை' தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு விதமான தளங்களைக் கொண்டு, படிக்கும் நமக்கு  புது அனுபவத்தை புன்முறுவலுடன்  தரவல்லது. யாரோ முனிவன் தவமிருந்தான் வரங்கள் பெற்றான் அதன் முடிவில் நீர்மேல் நடக்க தீபட்டால் எரியாதிருக்க என்றிரண்டு  ஆற்றின் மேலே அவன் நடந்தான் கொடுக்குத் தீயைச் சந்தனம் போல் உடம்பில் … Continue reading ஸ்ரீலஸ்ரீ

தேகம்

பின்நவீனத்துவ பாணியில் எழுதினால், நான்லீனியர் மாடலில் வசதியாக எதை வேண்டுமானாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல்  எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்...இழுக்கலாம்...முடிக்கலாம்...என்று சிலர் நினைத்து எழுதுகிறார்கள். இது எழுதுபவர்க்கு வசதியானது, ஆனால் படிக்கும் நமக்குத் தான் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவு முதிர்ச்சி வளரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.  இருந்தாலும் மனம் தளராமல் திரும்பவும் படித்தாலும் ஒட்டவே இல்லை...ஏனென்றால் இந்நாவலின் எழுத்தில் sincerity இல்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களம் மாறுபட்ட ஒன்று - வதை; இந்தச் சமுதாயத்தில் வதை என்பது எங்கும் … Continue reading தேகம்

லீலை – உண்ணி ஆர். (தமிழில்: சுகுமாரன்)

லீலை - சுகுமாரனின் எளிமையான மற்றும் தடம் மாறாத மொழிப்பெயர்ப்பில் வந்த 12 மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு. அதில் இந்த 'லீலா' ஒரு ஆச்சர்யமானதொரு கதைக் களத்தைக் கொண்டுள்ளது. ஒழுங்கு முறைகள், திட்டங்கள், மரபு சார்ந்த அமைப்புகள், சமூக கட்டமைப்பு, எவ்வித யோசனையுமின்றி ஒழுக்கம் என்ற பெயரில் ஒரே விதமான சமூகப் பார்வை என்று இருக்கிற காலத்தில் 'டாடாயிசம்' பாணியில் எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயத்தை வேறு விதமாகவோ அல்லது எதிர்மறையாகவோ பார்த்தால் எவ்வாறு இருக்கும்? அப்படியான மாற்றுப் … Continue reading லீலை – உண்ணி ஆர். (தமிழில்: சுகுமாரன்)

18ஆவது அட்சக்கோடு

18 ஆவது அட்சக்கோடு வழக்கம் போல் அசோகமித்திரனின் எளிமையான அல்லது எளிமை போல் மாயத்தோற்றம் தரும் எழுத்துக்களுடன் வலிமையான களத்தை கொண்டுள்ள நாவல்.  ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் கதை சொல்லப் படுகின்றது. இந்தச் சந்திரசேகரன் அசோகமித்திரனின் சாயல் என்றே நினைக்கிறன். இந்தியா விடுதலை பெற்றுவிட்ட போதிலும்  ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்பி மக்களிடம் மதவெறியை தூண்டிவிடுகிறார். அதுவரை அந்தக் காலனியில் நெருக்கமானவர்கள் கூட மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். … Continue reading 18ஆவது அட்சக்கோடு