லீலை – சுகுமாரனின் எளிமையான மற்றும் தடம் மாறாத மொழிப்பெயர்ப்பில் வந்த 12 மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு. அதில் இந்த ‘லீலா’ ஒரு ஆச்சர்யமானதொரு கதைக் களத்தைக் கொண்டுள்ளது.

ஒழுங்கு முறைகள், திட்டங்கள், மரபு சார்ந்த அமைப்புகள், சமூக கட்டமைப்பு, எவ்வித யோசனையுமின்றி ஒழுக்கம் என்ற பெயரில் ஒரே விதமான சமூகப் பார்வை என்று இருக்கிற காலத்தில் ‘டாடாயிசம்’ பாணியில் எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயத்தை வேறு விதமாகவோ அல்லது எதிர்மறையாகவோ பார்த்தால் எவ்வாறு இருக்கும்? அப்படியான மாற்றுப் பார்வை, பொதுவாக நம் எல்லோருக்கும் சர்சைக்குரியதாகத் தான் தோன்றும்.

27561
‘லீலை’யின் நாயகன் குட்டியப்பன் இப்படிப்பட்ட வித்தியாசமான (அவனைப் பொறுத்த வரை நாமெல்லாம் வித்தியாசமானவர்கள்) குணாதிசயத்துடன், வாழ்வை தலைகீழாகவும் எதிர்மறைக் கோணத்துடனும் பார்ப்பவன். குட்டியப்பன், தன் நண்பன் பிள்ளேச்சனுடன் சேர்ந்து, யானையின் துதிக்கையில் ஒரு பெண்ணைச் சாய்த்து போகிக்கவேண்டும் என்கிற
, அதற்கான யானையையும் பெண்ணையும் தேடி கோட்டயத்திலிருந்து வயநாடு வரை பயணிக்கிற கதை. இப்படிப் பட்ட ஒரு கதைக் களமா என்கிற எண்ணம் படிக்கும் எவருக்கும் கண்டிப்பாக எழும். ஆனால், அந்த எண்ணத்தை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு கதையைத் தொடர்ந்தால், குட்டியப்பனின் பித்துப் பிடித்த எண்ணங்களையும் செயல்களையும் நாம் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்து விடுவோம். கதையாசிரியர் உண்ணி அதில் வெற்றியடைந்து விடுகிறார்.

இங்கே நான் குட்டியப்பனின் கதாபாத்திரத்தையும் டாடாஇஸத்தையும் ஒப்பீடு செய்யக் காரணம், இரண்டுக்குமே சரி தவறு என்கிற வரம்புகள் இல்லை; அதுபோல, சந்தர்ப்பவசத்தால் நடக்கும் செயல்களே சரி என்றும், திட்டமிட்டுச் செய்யும் அனைத்தும் போலி மற்றும் தவறு என்கிற கோட்பாட்டில் இரண்டும் இருக்கிறது.

ஒருவனின் எண்ணமோ செயலோ, சமூகம் கோடிட்டிருக்கும் எல்லைக் கோட்டைத் தொட்டோ அல்லது தாண்டியோ இருந்தால் நாம் அதற்கு வேறொரு வர்ணம் பூசி, பைத்தியம் அல்லது குற்றவாளி என்று ஒதுக்கி வைத்துவிடுகிறோம். குட்டியப்பன் அப்படியான ஒரு குணாதிசயமுள்ளவன் – அவன் இம்மாதிரியானவன் என்கிற எந்தவிதமான எல்லை வரம்புகளுக்குள் அடக்க முடியாது; அப்படிப்பட்ட ஒரு இன்டெரெஸ்ட்டிங் character. எலேசியக்காவை தனக்கு டீ கொடுக்க வீட்டின் வெளியிலிருந்து ஏணியேறி வரச் செய்து கீழே விழ வைத்து முதுகு உடையக் காரணமாகிறான்; ஏற்றமான இடத்தைப் பார்த்து அதிலிருந்து விழுந்து சாக வேண்டுமென்கிறான்; பஸ்சிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் குழந்தையை அதன் தலை எதிலாவது மோதி உடையப் போகிறது என்கிறான்; – இப்படியான  மனப் பிறழ்ச்சியில் (நம்மின் பார்வையில்) பேசிக் கொண்டிருப்பவன், பிரேசில் காபி உருவான கதை, ஆர்க்கிமிடிஸ் கதையைப் பற்றியும், சாக்ரடீஸுக்கு யார் விஷம் வைத்தார்கள் என்பது பற்றியும், இன்னும் பல உலக விஷயங்கள் என்று பேசுகிறான்.

இக்கதையில் வரும்  மற்றுமொரு கவனிக்க வேண்டிய கதாபாத்திரம் லீலா என்கிற சிறுமி – தன்னைச் சுற்றி நடக்கும் எதையுமே தன்னால் தடுக்கவோ சரிசெய்யவோ முடியாது என்கிற முடிவில் தன்னுளேயே அத்துணை சோகத்தையும் உள்வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் இருக்கும் ஒரு அற்புதமான கதாபாத்திரம்.

வித்தியாசமான கதைக்களமும், கதாபாத்திரங்களும், எளிமையான எழுத்து நடையும், black humourஆன வசனங்களும், கோட்டயம் டு வயநாடு travel என்று ஒரு திரைப்படம் போல் நம் கண் முன் அழகாக விரிவது இச்சிறுகதையின் வெற்றி.

கண்டிப்பாக படிக்கலாம் – You won’t regret it!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s