பின்நவீனத்துவ பாணியில் எழுதினால், நான்லீனியர் மாடலில் வசதியாக எதை வேண்டுமானாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல்  எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்…இழுக்கலாம்…முடிக்கலாம்…என்று சிலர் நினைத்து எழுதுகிறார்கள். இது எழுதுபவர்க்கு வசதியானது, ஆனால் படிக்கும் நமக்குத் தான் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவு முதிர்ச்சி வளரவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.  இருந்தாலும் மனம் தளராமல் திரும்பவும் படித்தாலும் ஒட்டவே இல்லை…ஏனென்றால் இந்நாவலின் எழுத்தில் sincerity இல்லை.

33848555

ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்களம் மாறுபட்ட ஒன்று – வதை; இந்தச் சமுதாயத்தில் வதை என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் எல்லோருமே யாரையாவது தெரிந்தோ-தெரியாமலோ, நேரடியாகவோ-மறைமுகமாகவோ வதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். பசி கூட ஒரு வித வதை தான், அது யாரோ விட்ட சாபமாக கூட இருக்கலாம். இந்த நாவலில் தர்மா வதைப்படுகிறான் (இங்கே தர்மா என்பது சாரு என்று நினைக்கிறன்) அவன் பட்ட வதையை வேறு வழிகளில் மற்றவர்களுக்கு கொடுக்கிறான் (வதைக்கிறான்). வதைகளில் doctorate வாங்கியது போல கைதேர்ந்த நபராக இருக்கிறான். அந்த வதைகளை மிக விவரமாக ரெண்டு மூன்று அத்தியாயங்களில் விவரிக்கிறார் சாரு. படிக்கும் நமக்கு கொஞ்சம் பகீரென்கிறது. அந்த வதைகளினூடே தர்மாவின் கதை கடந்த காலம், நிகழ்காலம், அவனின் காதலிகள், சிறு வயதில் பன்றி வேட்டைக்கு போனது என்று சகட்டுமேனிக்கு (பாரம்பரிய வார்த்தையாக ‘குறுக்குவெட்டாக’ என்றும் கூறலாம் 🙂 ) ஆடுகிறது. குறுக்குவெட்டாக போவது பின்நவீனத்துவத்தின் ஒரு endorsed போக்கு என்றாலும், இந்நாவலில் ஒரு சத்தியம் இல்லை – சாரு ஏதோ அவசரத்தில் எழுதியது போலத்தான் இருக்கிறது.

இருந்தாலும் இறுதியில் வன்முறையை கையிலெடுத்தவன் அதே வன்முறைக்கே பலியானான் என்கிற clichéவான முடிவை கொடுக்கவில்லை என்பது ஒரு ஆறுதல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s