லீலை – உண்ணி ஆர். (தமிழில்: சுகுமாரன்)

லீலை - சுகுமாரனின் எளிமையான மற்றும் தடம் மாறாத மொழிப்பெயர்ப்பில் வந்த 12 மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு. அதில் இந்த 'லீலா' ஒரு ஆச்சர்யமானதொரு கதைக் களத்தைக் கொண்டுள்ளது. ஒழுங்கு முறைகள், திட்டங்கள், மரபு சார்ந்த அமைப்புகள், சமூக கட்டமைப்பு, எவ்வித யோசனையுமின்றி ஒழுக்கம் என்ற பெயரில் ஒரே விதமான சமூகப் பார்வை என்று இருக்கிற காலத்தில் 'டாடாயிசம்' பாணியில் எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயத்தை வேறு விதமாகவோ அல்லது எதிர்மறையாகவோ பார்த்தால் எவ்வாறு இருக்கும்? அப்படியான மாற்றுப் … Continue reading லீலை – உண்ணி ஆர். (தமிழில்: சுகுமாரன்)

குருபீடம்

இந்த வார விகடனில் (9-Mar-2017) வெளிவந்துள்ள 'குருபீடம்' என்கிற சிறுகதை இப்போதைய இந்தியா, ஏன்...உலகமே எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையின் கொடூரத்தை, படிக்கும் நம்மை சாத்வீகமான முறையில் கூறிப் பதற அடிக்கிறது. ஜா. தீபா எனும் பெண் எழுத்தாளர்  எழுதியுள்ளார். இவர் சினிமாத்துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார் என்றும் இதற்கு முன்னே சினிமா சம்பந்தமான இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. தெளிந்த நீரோடையைப் போல கதையை நகற்றி, நாட்டின் தலையாய பிரச்சினையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்லி, வாசகனின் மனதில் … Continue reading குருபீடம்

நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

2008ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலின் எதிரொலியாக பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் காஸா பகுதியிலும் எஞ்சியவர்கள் உலகெங்கிலும் முகமற்ற அகதிகளாக வாழ்கிறார்கள். இதைப்பற்றி, அலைவு இலக்கிய வகையான “காஸா பதில் எழுதுகிறது” என்ற சிறுகதைத் தொகுப்பின்மூலம், காஸா பகுதியில் வாழும் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தி மூன்று சிறுகதைகளை ரெஃபாத் அலாரீர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சாரா அலி எழுதிய இந்த 'நிலத்தின் கதை' அதில் ஒன்று. 23 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் … Continue reading நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

கோணங்கியின் ‘பாழ்’

'மதினிமார்கள் கதை' தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை  ஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை 'இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்' என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது  நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச … Continue reading கோணங்கியின் ‘பாழ்’

அந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்

  ஒரே கதை களம், இரு வேறு கதைகள் அனால் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளலாம், தனித்தனியாகவும் படிக்கலாம். இரு கதைகளும் பெண்களை மையப்படுத்தியும், காதல்-கல்யாணம் என்கிற சிலந்தி வலையில் சிக்காமல் விடுதலை பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பைரவி & ஜெ என்கிற கதைநாயகிகளை பற்றியது. வழக்கம் போல ஜெயகாந்தனின் நேர்த்தி நிறைந்த எழுத்து blisful experienceஐ கொடுக்கிறது

அறம் – ஜெ.மோ.

'யானை டாக்டர்' கதையில் ஒரு வசனம் - "மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…" அறம் தொகுப்பில் வரும் அத்தனை கதைகளை படிக்கும் போது ' நாம என்ன பெரிய புடுங்கியா' என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது. என்னுடைய top 5 வரிசைபடி... … Continue reading அறம் – ஜெ.மோ.