சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

I didn't accept responsibility for my actions, because i'm not that much strong enough to face the consequences - இப்படி ஒரு escapism உள்ள ஒரு characterரிடம், ஏதும் அறியாத பதின் வயதில் தன்னை இழந்த கங்காவின் முரண்பாடான வாழ்வைப் பற்றிய புதினம். இந்த கதைக்களமே 1970களில் யதார்த்தத்தை மீறியதாக இருந்திருக்கும் - 40 வருடங்கள் ஆனபின்பும் இப்போதும் இது யதார்த்தத்தை மீறியதாகத்தான் உள்ளது. சமூகம் எனும் மாயச் சூழல் … Continue reading சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

அந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்

  ஒரே கதை களம், இரு வேறு கதைகள் அனால் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளலாம், தனித்தனியாகவும் படிக்கலாம். இரு கதைகளும் பெண்களை மையப்படுத்தியும், காதல்-கல்யாணம் என்கிற சிலந்தி வலையில் சிக்காமல் விடுதலை பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பைரவி & ஜெ என்கிற கதைநாயகிகளை பற்றியது. வழக்கம் போல ஜெயகாந்தனின் நேர்த்தி நிறைந்த எழுத்து blisful experienceஐ கொடுக்கிறது

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. அப்பா இறந்தபிறகு அவரது பூர்வீக கிராமத்துக்கு, அவருடைய தத்துப் பிள்ளையான வெள்ளைக்கார ரத்தம் ஓடும் ஹென்றி (சகமனிதராக வாழும், எந்த வித ஆசையும், எதிர்பார்ப்பும், குறிக்கோளும் அற்ற மதமற்ற துறவி) தன் “வேர்களைத்” தேடி வருகிறான். பின்பு அங்கு நடக்கும் எந்த வித ஆர்ப்பாட்டமான திருப்புமுனைகள் அற்ற தெளிந்த நீரோடையான கதை. இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி, பறவை போல … Continue reading ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்