நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

2008ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலின் எதிரொலியாக பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் காஸா பகுதியிலும் எஞ்சியவர்கள் உலகெங்கிலும் முகமற்ற அகதிகளாக வாழ்கிறார்கள். இதைப்பற்றி, அலைவு இலக்கிய வகையான “காஸா பதில் எழுதுகிறது” என்ற சிறுகதைத் தொகுப்பின்மூலம், காஸா பகுதியில் வாழும் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தி மூன்று சிறுகதைகளை ரெஃபாத் அலாரீர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சாரா அலி எழுதிய இந்த 'நிலத்தின் கதை' அதில் ஒன்று. 23 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் … Continue reading நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

கோணங்கியின் ‘பாழ்’

'மதினிமார்கள் கதை' தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை  ஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை 'இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்' என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது  நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச … Continue reading கோணங்கியின் ‘பாழ்’