குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

'நாளை மற்றுமொரு நாளே' மாதிரியான களம் கொண்ட நாவல் - 'ஒரு மாதிரியான' என்று ஒதுக்கக்கூடிய காலத்தில் - 1960களில் எழுதப்பட்ட நாவல். சமுதாயத்திற்கு பயந்து யாவரும் ஒதுக்கும் ஏரியா, ஆனால் கள்ளத்தனமாக ஒதுங்க விரும்புவது இந்த 'குறத்தி முடுக்கு'. அதனால்தான் ஜி.நாகராஜன், 'இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று கேட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்; வேண்டுமானால் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்' என்று முதலிலேயே, யோக்கியமாக நடிக்காதீர்கள் என்று கூறிவிடுகிறார். கதையின் crux இதுதான் - ஊரின் மத்தியில் … Continue reading குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்

கன்னி – J. பிரான்சிஸ் கிருபா

பித்தின் உச்சம் நாவலின் ஓரிடத்தில் அமலாவைப் பற்றி ஆசிரியர் JFK (ஜெ. பிரான்சிஸ் கிருபா) இவ்வாறு விளிக்கிறார் "பனிமலர் போலும் இளவரசி போலும் காட்சித் தந்தாள்" என்று.  ஆம்...இந்தக் கன்னி ஒரு இளவரசி - இளவரசி எங்கிருப்பாள்? அரண்மனை தர்பாரிலே, ராஜ சிம்மாசனத்தில் பொலிவோடு பேரழகியாக வீற்றிருப்பாள் தானே? அப்படி ஒரு அழகியை நாம் சாதாரணமாக தரிசனம் செய்யமுடியுமா...ம்ஹூம்...முதலைகள் இருக்கும் அகழியைத் தாண்டவேண்டும், கோட்டை கொத்தளங்களைக் கடக்க வேண்டும், வாயில் காப்போனிடம் அனுமதிப் பெற்று, பின்பு ராஜ வீதியை … Continue reading கன்னி – J. பிரான்சிஸ் கிருபா

சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

I didn't accept responsibility for my actions, because i'm not that much strong enough to face the consequences - இப்படி ஒரு escapism உள்ள ஒரு characterரிடம், ஏதும் அறியாத பதின் வயதில் தன்னை இழந்த கங்காவின் முரண்பாடான வாழ்வைப் பற்றிய புதினம். இந்த கதைக்களமே 1970களில் யதார்த்தத்தை மீறியதாக இருந்திருக்கும் - 40 வருடங்கள் ஆனபின்பும் இப்போதும் இது யதார்த்தத்தை மீறியதாகத்தான் உள்ளது. சமூகம் எனும் மாயச் சூழல் … Continue reading சில நேரங்களில் சில மனிதர்கள் – JK

நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

2008ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலின் எதிரொலியாக பெரும்பான்மையான பாலஸ்தீனர்கள் காஸா பகுதியிலும் எஞ்சியவர்கள் உலகெங்கிலும் முகமற்ற அகதிகளாக வாழ்கிறார்கள். இதைப்பற்றி, அலைவு இலக்கிய வகையான “காஸா பதில் எழுதுகிறது” என்ற சிறுகதைத் தொகுப்பின்மூலம், காஸா பகுதியில் வாழும் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தி மூன்று சிறுகதைகளை ரெஃபாத் அலாரீர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சாரா அலி எழுதிய இந்த 'நிலத்தின் கதை' அதில் ஒன்று. 23 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் … Continue reading நிலத்தின் கதை – சாரா அலி (காஸா பதில் எழுதுகிறது

அறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம்

கலாச்சாரம் என்பது 'மறு உற்பத்தி' சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசி வருகிற காலக்கட்டத்தில் (when I hear the word culture, I reach for my gun - Hanns Johst அளவுக்கு மோசமில்லை என்றாலும் 🙂 ), யாருக்கும் புரியாத தத்துவார்த்த மொழியை ஒதுக்கி விட்டு எளிமையான மொழியில் தமிழர்களுக்கு அவர்களின் வழிவழியாக வந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் - உதாரணத்திற்கு உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என்று … Continue reading அறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம்

கோணங்கியின் ‘பாழ்’

'மதினிமார்கள் கதை' தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை  ஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை 'இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்' என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது  நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச … Continue reading கோணங்கியின் ‘பாழ்’

அந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்

  ஒரே கதை களம், இரு வேறு கதைகள் அனால் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளலாம், தனித்தனியாகவும் படிக்கலாம். இரு கதைகளும் பெண்களை மையப்படுத்தியும், காதல்-கல்யாணம் என்கிற சிலந்தி வலையில் சிக்காமல் விடுதலை பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பைரவி & ஜெ என்கிற கதைநாயகிகளை பற்றியது. வழக்கம் போல ஜெயகாந்தனின் நேர்த்தி நிறைந்த எழுத்து blisful experienceஐ கொடுக்கிறது

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. அப்பா இறந்தபிறகு அவரது பூர்வீக கிராமத்துக்கு, அவருடைய தத்துப் பிள்ளையான வெள்ளைக்கார ரத்தம் ஓடும் ஹென்றி (சகமனிதராக வாழும், எந்த வித ஆசையும், எதிர்பார்ப்பும், குறிக்கோளும் அற்ற மதமற்ற துறவி) தன் “வேர்களைத்” தேடி வருகிறான். பின்பு அங்கு நடக்கும் எந்த வித ஆர்ப்பாட்டமான திருப்புமுனைகள் அற்ற தெளிந்த நீரோடையான கதை. இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி, பறவை போல … Continue reading ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்

ஒரு கடலோர கிராமத்துக் கதை – தோப்பில்

என்னுடைய முதல் முஸ்லீம் communityயின் கதை வாசிப்பு அனுபவம். இந்த கதை 'தேங்காய் பட்டினம்' என்ற கடலோர கிராமத்தையும், அதில் உள்ள வட்டார சொற்கள் பேசும் கதாபாத்திரங்களும், அவர்களின் மூட நம்பிக்கைகளும், ஏன் எதற்கென்று கேட்காமல் முதலாளித்துவ அடிமைகளாக வாழும் மடத்தனத்தை தோலுரித்து காட்டுகிறது. முஸ்லீம் சமூகம் ஒரு sand box முறையில் வாழும் ஒரு community. அவர்களின் பழக்க வழக்கங்கள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. பள்ளிவாசல் தொழுகையில் அனைவரும் சமம், ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை … Continue reading ஒரு கடலோர கிராமத்துக் கதை – தோப்பில்